வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியுள்ளதாக தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
பா.டெனீஸ்வரன் வடக்கு மாகாணத்தின் மீன்பிடி, போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து வந்தார். இந்த நிலையிலேயே, அவர் வகித்து வந்த அமைச்சுப் பதவிகளில் சிலவற்றை, அனந்தி சசிதரனிடம் கையளித்துள்ளதோடு, இன்னும் சில அமைச்சுக்களை தானே எடுத்துக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக தெரிவித்து பா.டெனீஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநருக்கு அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார். குறித்த கடிதம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வடக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை கோரியிருந்தார். இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண முதலமைச்சர், பா.டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவிகளை பறித்துள்ளார்.

0 Responses to டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி பறிப்பு!