Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் போராளிகள் 12,000 பேருக்கும் சரியாக புனர்வாழ்வளிக்கப்பட்டதா என்று ஆராய வேண்டியுள்ளது. ஆகவேதான், வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்கிற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வாள் வெட்டுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட சிலர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே மேலைத்தேய நாடுகள் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினாலும், முகாம்களை அகற்றமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to முன்னாள் போராளிகளுக்கு சரியாக புனர்வாழ்வளிக்கப்பட்டதா என்று ஆராய வேண்டியுள்ளது: மஹிந்த சமரசிங்க

Post a Comment

Followers