Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலும், காலை 11.45 மணியளவில் கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடம் முன்பாகவும், யாழ். பேரூந்து நிலையத்துக்கு முன்னால் இன்று பிற்பகல் 03.00 மணியளவிலும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

0 Responses to அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுப்பு!

Post a Comment

Followers