2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த யாராலும் முடியாது என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் வரை எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து வந்த நிதிஷ் குமார், தற்போது பிரதமர் மோடியை அசைக்க முடியாத சக்தி என வருணித்துள்ளார்.
லாலுவுடனான கூட்டணியை முறித்து கொண்டு பதவி விலகிய மறுநாளே, பாரதிய ஜனதா ஆதரவுடன் முதலமைச்சராக மீண்டும் அரியணை ஏறியதே நிதிஷ் குமாரின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம். மோடியின் பணமதிப்பிழப்பு, GST வரி விதிப்பு, பினாமி சட்டம் போன்ற மக்கள்நல நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக நிதிஷ் கூறியுள்ளார்.
தனது கட்சி மாநில அளவிலான சிறிய கட்சி என்றும், தாம் ஒரு போதும் நாட்டின் உயரிய பதவிக்கு வர வேண்டும் என்று எண்ணியதில்லை என்றும் நிதிஷ் கூறியுள்ளார். இதன் மூலம் மோடிக்கு போட்டியாக பிரதமர் பதவிக்கு எல்லாம் தாம் ஆசைப்படவில்லை என்பதையும் நிதிஷ் விளக்கியுள்ளார்.

0 Responses to மோடியை யாராலும் வீழ்த்த முடியாது: நிதிஷ் குமார்