Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பொய்யான காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்கக் கூடாது. இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2012ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற சட்டமூலமே கடந்த பாராளுமன்றத்தில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமூலம் அப்போதைய துறைசார் அமைச்சர் அதாவுல்லாவினால் சமர்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த சட்டமூலம் பஷில் ராஜபக்ஷவின் அரசியல் நோக்கங்களை பிரதானமாக கொண்டே தயாரிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த உள்ளுராட்சி தேர்தல் முறையில் பாரிய முரண்பாடு காணப்பட்டது. பஷில் ராஜக்ஷவின் நோக்கம், இரண்டு கட்சி முறைக்கு இடமளிப்பதாக இருந்தது. எந்தவொரு தேர்தலிலும் பொதுமக்களின் விருப்பங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே விதியாக இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பொய்யான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது: அநுரகுமார திசாநாயக்க

Post a Comment

Followers