ஏறிய ஏணியையே எட்டி உதைத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் 420 என்பது விரைவில் தெரிந்து விடும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல, அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளன.
பல்வேறு இடையூறுகளை கடந்து இன்று மாலை மதுரையில் பொதுக் கூட்டம் மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்க முடியாது. பிரமாணப் பத்திரத்தில் எனது பெயரைத்தான் அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக கூறியுள்ளனர். விரைவில் எடப்பாடியின் பொய் வெளிப்படும்.” என்றுள்ளார்.
0 Responses to ஏறிய ஏணியையே எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி; டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு!