Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போது அதனைத் தடுப்பதற்கு இராணுவத்தினை பயன்படுத்துவது தப்பில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்த கருத்துத் தொடர்பாக இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும். எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால், குற்றங்கள் நடைபெறும் பொழுது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.

இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்கக்கூடாது அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்கவேண்டும் என கேட்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர்.”என்றுள்ளார்.

0 Responses to குற்றச் செயல்களைத் தடுக்க இராணுவத்தை களமிறக்குவது தப்பில்லை: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers