Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது ஆசியோ, ஆதரவோ இன்றி யாராலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும் அதற்கு தனது விருப்பம், ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்றபின்னர் அரசாங்கமும், ஜனாதிபதியும், முடிவடைந்து விடுவார்களென கூட்டு எதிரணி (மஹிந்த அணி) உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 113 ஆசனங்களைப் பெற்றாலும் அரசியலமைப்புக்கமைய எவரும் தனது ஆசீர்வாதம் இன்றி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றுள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகையில் வெற்றுக் கோசமிடுவோர் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஹிங்குரங்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி வெற்று கோசமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடமளிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாட்டில் சிலர் அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊழல் மோசடி, வீண் விரயம், மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய நாட்டின் யுகத்தை மாற்றியுள்ளோம். நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே கோசமிட்டுக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமாக பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to எனது ஆசியின்றி எவராலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது: மைத்திரி

Post a Comment

Followers