தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க ஒரு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என ஒரு தரப்பினரும், ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என மற்றொரு தரப்பினரும் திட்டமிடுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குழப்பங்கள் நீங்கி நிலையான ஆட்சி தொடர வேண்டும் என விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏனெனில் இப்போது உள்ள அரசியலில் முற்றிலுமாக தமிழக மக்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது. யாரும் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என நினைப்பதில்லை. எனவே தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இருக்க வேண்டும். உடனே தேர்தலை சந்திக்கும் அளவிற்கு தமிழக மக்கள் மீது சுமையை ஏற்ற கூடாது என்றார்.

0 Responses to தமிழகத்தில் குழப்பங்கள் அற்ற நிலையான ஆட்சி தொடர வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்