Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெக்ஸிக்கோ அமெரிக்கா இடையே எல்லையில் சுவர் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை மெக்ஸிக்கோ அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்துக்கு எந்த ஒரு கட்டத்திலும் அடிபணிய மாட்டோம் என மெக்ஸிக்கோ அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

மெக்ஸிக்கோ அரசின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட இந்த அறிக்கையில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த அறிவிப்பு மெக்ஸிக்கோ அரசின் முடிவின் ஒரு பகுதி மட்டுமல்ல என்றும் அந்நாட்டின் பெருமை மற்றும் இறையாண்மையை மதிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் கட்டுவது என்ற உறுதி மொழியை தேர்தல் பிரச்சார சமயத்திலேயே டிரம்ப் வழங்கி இருந்த காரணத்தால் அமெரிக்க காங்கிரஸ் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அரச பொறிமுறை மூடப்படும் எனவும் போனிக்ஸில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஊர்வலம் ஒன்றில் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் சுவரின் கட்டுமானம் மெக்ஸிக்கோவின் பதிலுக்காகக் காத்திருக்க முடியாது என்றும் காங்கிரஸ் செலவை ஏற்பதுடன் ஒரு கட்டத்தில் மெக்ஸிக்கோ அச்செலவை மீள அடைக்க வேண்டும் எனவும் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை டெக்ஸாஸ் மெக்ஸிக்கோ பகுதிகளைத் துவம்சம் செய்து வரும் ஹார்வே புயலுக்கு மத்தியில் டிரம்ப் வெளியிட்ட டுவீட்டில் உலகில் மிக அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிக்கோவில் அமெரிக்காவுடனான எல்லையில் தடுப்புச் சுவர் அமைப்பது மிக அவசியம் என்றும் அந்நாட்டுடன் அமெரிக்கா மேற்கொண்ட NAFTA வர்த்தக ஒப்பந்தம் தான் அமெரிக்கா ஒரு நாட்டுடன் மேற்கொண்ட மிக மோசமான ஒரு ஒப்பந்தம் எனவும் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் ஹார்வே புயலால் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்ட அமெரிக்காவுடன் இணைந்து செயற்படத் தாம் தயாராக இருப்பதாகவும் இதன்மூலம் அமெரிக்காவுடனான நல்லுறவை வளர்க்க மெக்ஸிக்கோ முனைவதாகவும் கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to எந்தவொரு கட்டத்திலும் எல்லைச் சுவருக்கு பணம் தர மாட்டோம்! : டிரம்புக்கு மெக்ஸிக்கோ அறிவுறுத்து!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.