Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையேயான நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டது. கட்சியின் மத்திய செயற்குழு, அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை அங்கீகரித்து உறுப்பினர்களுக்கு அறிவித்ததும், அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகினார்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.