“தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா?” என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கும் - தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்கிழமையும் கமல்ஹாசன் ட்விட்டரில் அதிரடி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், “தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றன. முதல்வர் பதவி வகிப்பவர் இராஜினாமா செய்யும் அளவிற்கு மாநிலத்தில் ஊழல் குற்றங்கள் பெருகி மலிந்து கிடக்கிறது. இச்சூழலில் எந்த கட்சியும் ஏன் தமிழக முதலமைச்சரை இராஜினாமா செய்யச் சொல்லவில்லை.” என வினவியுள்ளார்.
ஆட்சியில் தவறுகளும், ஊழலும் நடந்தால் மாநில முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா என்றும் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

0 Responses to முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவாரா?; கமல்ஹாசன் கேள்வி!