Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்துதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அப்படியானவர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் திட்டங்களை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. தற்போதுள்ள நல்லாட்சி நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும்.” என்று சிறுவர், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால், அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எங்களுடைய சொந்த கால்களில் வாழ்ந்த எங்களைக் கடந்த அரசாங்கம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படியான அரசாங்கத்திலே யார் யார் அங்கம் வகித்தார்களோ, யார் யார் காட்டிக்கொடுத்தார்களோ, யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதுணையாக நின்றார்களோ அவர்களை இனம் காணுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள். அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள். எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள். எனவே இவ்வாறனவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத சில தீய சக்திகள் வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல், ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல் இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை செய்து வருகின்றார்கள்.

எனவே இதிலிருந்து நாங்கள் விடுதலைப்பெற வேண்டும். இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம். 2015இற்கு பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். எனவே இப்படியான நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவுசெய்ய வேண்டும். உறுதியானவா்களை தெரிவு செய்ய வேண்டும்.

தற்போது வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கர் வாழ்க்கை, காணாமல் போதல், வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது.. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to சிறுவர்களையும், பெரியவர்களையும் படுகொலை செய்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்: விஜயகலா மகேஸ்வரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.