நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் புவி வெப்பத்துக்கும் சூரியனில் இடம்பெற்று வரும் கருத்தாக்கத்துக்கும் தொடர்பில்லை எனவும் இன்றைய சூழலில் அதிகரித்து வரும் புவி வெப்பத்துக்கு மனிதனின் செயற்பாடுகளே அதிகபட்சம் செல்வாக்கு செலுத்துவதாகவும் விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த சில தசாப்தங்களாக சூரியனை விஞ்ஞானிகள் அவதானித்து வந்துள்ளனர். இதன்போது அவர்கள் கடந்த 40 வருடங்களில் சூரியனின் ஒளிக்கதிர் பிரகாசம் சிறிதும் அதிகரிக்கவில்லை என்றும் பதிலாக சற்று குறைவடைந்துள்ளது என்றும் கண்டு பிடித்துள்ளனர். இதனால் இப்போது அதிகரித்து வரும் பூகோள வெப்பநிலைக்கு நாம் சூரியனைக் குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் உயிர் வாழ்க்கைக்கும் பருவ நிலை சுழற்சி மற்றும் மாற்றங்களுக்கும் சூரியன் பெரும் செல்வாக்கு செலுத்துவது குறிப்பிடத்தக்கது. பூமியில் மனிதனின் மின்காந்த தகவல் சாதனங்களை செயலிழக்கச் செய்யக் கூடியதும் வெப்பத்தை சற்று அதிகரிக்கக் கூடியதுமான சூரிய சூறாவளியின் சுழற்சியே 11 வருடங்கள் என்ற போதும் இது மிகத்திருத்தமாக இடம்பெறுவதில்லை எனப்படுகின்றது. மேலும் சூரியனின் குறிப்பிட்ட சில கதிர் வீச்சுக் கதிர்களே புவி வெப்பம் அதிகரிக்கக் காரணமாகின்றது எனவும் கணிக்கப் பட்டுள்ளது.
அதே நேரம் சூரியனில் இடம்பெறும் சில மாற்றங்கள் பூமிக்கு குளிர்ந்த காலநிலையை அளிப்பதும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. உதாரணமாக 1645 தொடக்கம் 1705 ஆம் ஆண்டு வரை சூரியனின் இந்த செயற்பாட்டால் குறுகிய கால பனியுகம் (Ice age) ஏற்பட்டதாக வரலாற்றில் பதியப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பூகோள வெப்ப அதிகரிப்புக்கும் சூரியனுக்கும் தொடர்பில்லை! : ஆய்வில் தகவல்