Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சொகுசு வாகனங்களையும், பணத்தையும் பெற்றுள்ளார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளமை பொறுப்பற்ற செயலாகும்.” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எது உண்மையென்று வீ.ஆனந்தசங்கரி அறிந்துள்ள போதிலும், இவ்வாறு உண்மைக்கு மாறாக செய்தியை பொறுப்பற்ற ரீதியில் வெளியிட்டுள்ளமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய வீ.ஆனந்தசங்கரி, “கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்திடம் சொகுசு வாகனங்களையும், 10 மில்லியன் ரூபாய் பணத்தினையும் பெற்றுக்கொண்டு ஆதரவளித்து வருகின்றார்கள்” என்று கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் அரசிடம் சொகுசு வாகனங்களும், பணமும் பெற்றதாக ஆனந்தசங்கரி கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.