Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, “கடந்த கால ராஜபக்ஷ ஆட்சின் போது நாட்டின் மீது விடுக்கப்பட்டிருந்த சவால்கள் பலவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிர்வாக காலப்பகுதியில் மேற்கொண்ட ஊழல், மோசடி மற்றும் பாரிய குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பிரதிபலனாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் சட்டவிரோதமாக சொந்தமாக்கிக் கொண்டிருந்த 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் தற்போது நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் கீழ் வந்துள்ளன.

வெளிநாட்டினருக்கு அரச சொத்துக்களை விற்கின்றனர், அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துகின்றனர் என்று கூறி மக்களை தூண்டிவிடும் விகாரை அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய துரோகங்களை இழைத்துக் கொண்டிருக்கின்றார்.” என்றுள்ளது.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றார்: மங்கள சமரவீர

Post a Comment

Followers