Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க.வையும், அதன் ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று புதன்கிழமை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகித்தார்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “சமீப காலமாக தமிழக அரசு மத்திய அரசின் இணக்கப் போக்கை விமர்சித்து எதிர்க்கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஆட்சிக்கு வரும்வரை நான் அரசியல்வாதி, ஆட்சிக்கு வந்தபிறகு நான் அனைவருக்கும் பொதுவானவன். நான் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று பார்ப்பதில்லை. அனைவரும் தமிழ்நாட்டு மக்கள்தான்.

அனைவருக்காகவும்தான் நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்ற கொள்கையை கொண்டிருந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியைத்தான் ஜெயலலிதாவின் வழியில் வந்த இந்த அரசு கடைப்பிடிக்கிறது. எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் முக்கியமில்லை.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் சுயநலத்துக்காக எதையாவது பேசி மக்களை திசை திருப்பி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு, மக்கள் பணி ஆற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் பலர் நரியை போல சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். ஒருகாலும் அவர்களுடைய சூழ்ச்சி வெற்றியடையாது. மற்றவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களையும் சூழ்ச்சிகளையும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் நின்று முறியடிப்பார்கள். ” என்றுள்ளார்.

0 Responses to கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

Post a Comment

Followers