‘எமது பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று கிளிநொச்சி இரணைதீவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமது நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த 102 நாட்களாக போராடி வரும் இரணைதீவு மக்கள், நேற்று புதன்கிழமை கொழும்பிலும் போராட்டமொன்றை நடத்தினர். இதன்போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.
“எமது சொந்தக் காணிகளிலிருந்து கடற்படை வெளியேறி, அருகிலுள்ள அரச காணிகளில் குடியிருப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என்று குறிப்பிட்ட இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி, தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இரணைதீவு மக்களின் காணிகள் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் முடிவு காணப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன வாக்குறுதியளித்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்!