Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு தேசிய பொருளாதார சபை அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரைக் கொண்டதாக இந்த சபை அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளும் கொண்டிருக்கும் வேறுபட்ட பொருளாதார நிலைப்பாடுகளை ஆராய்ந்து நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டமாகக் கொண்டுவரும் நோக்கில் இந்த சபை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

“இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கி அரைவாசியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கம் தொடரும். இரண்டு வருட காலத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். எதிர்வரும் காலத்தில் பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கும், அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த சபை அமைக்கப்பட்டிருக்கின்றது.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு!

Post a Comment

Followers