கடல் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு. நாடு முகம் கொடுத்துள்ள இந்தக் கடன் சுமையை நாளைய சமூகத்திற்கு விட்டு வைக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொறட்டுவையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமது நாட்டை இப்பாரிய கடன் தொல்லையில் இருந்து மீட்டு சுபீட்சமான நாடொன்றை உருவாக்கவே நாம் கட்சி ரீதியில் பிளவுபடாமல் ஒன்றிணைந்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இதை கண்டு எதிர் அணியினர் கூச்சல் இடுகின்றனர். யார் எதை சொன்னாலும் இந்த அரசு 2020ஆம் ஆண்டு வரை செயற்பட்டு அதன் இலக்கை அடைந்தே தீரும்.
நாங்கள் ஒரு புது யுகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். உலகம் முன்னேற்றம் அடைவதை போல் நமது நாடும் முன்னேற்றம் காண வேண்டும். தொழில்நுட்பத் துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும். மாணவர்களுக்கும் இந்த தொழில்நுட்ப அறிவை புகட்ட வேண்டும்.
இதற்காக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்போது கடன் தொல்லையை நீக்கிய பின் நாடு முன்னேற்றம் காண்பதற்காக புதிய தொழிற்துறைகளை உருவாக்க வேண்டும். ” என்றுள்ளார்.

0 Responses to கடன் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே இலக்கு: ரணில்