நீட் விவகாரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய மருத்துவ இடங்கள் தமிழகத்தில் இருப்பதாகவும், தமிழகத்திற்கு கிடைக்க இருக்கும் ஓராண்டு விலக்கால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் மருத்துவ துறையில் முன்னோடியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் தான் விலக்கு கேட்டுள்ளதாகவும், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நீட் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு நடத்துவதற்கு 6 நாட்கள் போதுமானது. எனவே வரும் 31ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு: விஜயபாஸ்கர்