Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித அறிவுக்கு முன்னோடியாகவும் கணிதத்தில் மிக முக்கியமான ஸ்தானத்தை வகிப்பதும் 0 (பூச்சியம்) என்ற குறியீடு என்றால் அது மிகையாகாது. இக்குறியீடு முன்னர் கருதப் பட்டதை விடத் தற்போது 500 வருடங்கள் பழமையானது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களைத் திணற வைக்கும் பூச்சியத்தின் காலம் இதற்கு முன்பு 9 தொடக்கம் 12 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது என்றே கருதப் பட்டது. ஆனால் தற்போது பண்டைய இந்தியாவைச் சேர்ந்த ஒரேயொரு கணித ஓலைச்சுவடி ஆவணமான பக்‌ஷாலி என்ற நூலின் கார்பன் ஆயுள் கணிப்பின் படி பூச்சியம் இவ்வருடங்களுக்கு 500 வருடங்கள் முன்பு அதாவது 224 தொடக்கம் 383 AD ஆண்டுகளுக்கு இடையே தான் கண்டு பிடிக்கப் பட்டதாக ஆதாரம் கிடைத்துள்ளது.

அதாவது இந்த பக்‌ஷாலி சுவடியில் பூச்சியத்துக்கான டாட் என்ற குறியீடு பயன்படுத்தப் பட்டுள்ளதாம். இன்றைய பாகிஸ்தானின் பக்‌ஷாலி என்ற கிராமத்தில் 1881 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற இந்த சுவடியை ஒரு விவசாய குடும்பம் பாதுகாத்து வந்துள்ளது. 1902 இல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் பொட்லெயான் நூலகத்துக்கு இந்த சுவடி அனுப்பி வைக்கப் பட்டும் இருந்தது. முன்னதாக இந்த சுவடியில் பயன்படுத்தப் பட்டிருந்த மொழி பௌத்த மத செல்வாக்குப் பெற்ற சமஸ்கிருத குறியீடுகளைக் கொண்டிருந்ததாக அடையாளம் காணப்பட்டது. பூச்சியத்துக்கு இணையான சுமார் நூற்றுக் கணக்கான குறியீடுகளைக் கொண்டிருந்த இந்த சுவடி ஒரு வியாபாரி தினசரி வணிகப் பதிவுகளை மேற்கொள்ளப் பயன்படுத்திய ஒன்று என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக நிர்வாகம் இக்கண்டுபிடிப்பை இவ்வளவு காலம் கழித்து ஏன் 2017 இல் வெளியிட்டனர் என்பதும் மர்மமாகவே உள்ளது. இதேவேளை 0 ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் கண்டுபிடிக்கப் பட்டது என்பதை ஏற்க மறுக்கும் சில அறிஞர்கள் கணிதத்தின் மிக முக்கியமான இந்த குறியீடு மனித உள்ளுணர்வில் இருந்து பரிணாமம் அடைந்து வந்தது என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பூச்சியம் 0 என்ற குறியீடு கண்டுபிடிக்கப் பட்ட காலம் இன்னமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாம்! : புதிய ஆய்வில் தகவல்

Post a Comment

Followers