தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இருப்பதாக 109 சட்ட மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வனை தவிர மற்றவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவின் 135 சட்டமன்ற உறுப்பினர்களில் 20 பேர் டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளனர். இந்த கூட்டத்தை புறக்கணித்து தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்கள் புதுவையில் முகாமிட்டுள்ளனர். எஞ்சிய 114 பேரில் கருணாஸ் உள்ளிட்ட 3 பேர் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர். கூட்டணி- 3, சபாநாயகர், தமிழ்செல்வன் தவிர மீதி 109 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினகரன் அணியை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாவும் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக தினகரன் ஆதரவு 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதனிடையே சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் வலியுத்தி வருகின்றன. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் தலைவர் வலியுறுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து 109 சட்ட மன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!