அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்ததிலிருந்து தமிழக அரசியலில் நாளுக்கு நாள் திருப்பங்கள் நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை நிருப்பிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தினகரன் அணியிலுள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள். கட்சி விதியின்படி 5இல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். திட்டமிட்டபடி 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.” என்றுள்ளார்.

0 Responses to அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி 12ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்