Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் கருத்தரங்கொன்றில் பங்குபற்றுவதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லி செல்லவுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் 106வது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவைத் தலைவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், பா.டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம், சி.தவராஜா, அ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட், க.சிவநேசன், சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, பி.சிராய்வா, அ.அஸ்மின், றி.பதியுதீன், தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ் ஆகியோரே இவ்வாறு புதுடில்லி செல்லவுள்ளனர்.

இந்த கருத்தரங்கு எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

0 Responses to வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் புதுடில்லி பயணம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.