Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பதவியை நீக்கி சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை இரத்துசெய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகர் தனபாலின் உத்தரவு சட்டவிரோதம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சபாநாயகர் தனபாலின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு 19 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனிடையே தமது கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து விளக்கம் அளிக்க சபாநாயகர் 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தினகரன் ஆதரவாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில், விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனுடன் இவ்வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

0 Responses to தகுதி நீக்கத்தை எதிர்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

Post a Comment

Followers