Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மும்பைத் தாக்குதலில் மூளையாகச் செயற்பட்ட தீவிரவாதியாகக் கருதப்படும் ஹபீஸ் சயீத்தின் சர்ச்சைக்குரிய அரசியல் கட்சி போட்டியிடவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி கசிந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பரில் மும்பையின் மக்கள் கூடும் பல முக்கிய இடங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டனர். இந்தியாவையும் உலகத்தையும் உலுக்கிய இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவன் ஹபீஸ் சயீத். ஏற்கனவே இவனது லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பு சர்வதேசத்தால் தடை செய்யப் பட்ட நிலையில் இவனால் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட கட்சியான ஜமாத் உத் தவா உம் அமெரிக்காவாலும் ஐ.நா இனாலும் தடை செய்யப் பட்டது. மேலும் கடந்த மாதம் முதல் ஹபீஸ் சயீத்தும் அவனது முக்கிய நண்பர்கள் சிலரும் பாகிஸ்தான் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில் வீட்டுக் காவலில் இருந்தவாறே ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்ததாகவும் அது பாகிஸ்தான் தேர்தல் கமிசனால் இன்னமும் அங்கீகரிக்கப் படவில்லை என்றும் கூட செய்திகள் வெளியாகி உள்ளன. இதேவேளை பனாமாகேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி இழந்து எம்பி பதவியும் பறிபோயுள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் ஹபீஸ் சயீத்தின் கட்சியும் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to 2018 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் சர்ச்சைக்குரிய தீவிரவாதியின் கட்சி போட்டி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.