ஐக்கிய தேசியக் கட்சி, 2020ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம் என்று கூறினாலும், தமக்கு அவ்வாறானதொரு எதிர்பார்ப்பு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் உள்ளிட்ட கட்சியினர் எதிர்பார்ப்பது சுதந்திரக் கட்சியை முதன்மைப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதையே எனவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

0 Responses to 2020இல் ஐ.தே.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு இல்லை: மஹிந்த