Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவை விலக்கிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் 20 கோடி ரூபாய் தருவதாக, பழனிசாமி அணி பேரம் பேசி வருகின்றது. அதற்கு இணங்கவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசைக் கொண்டு மிரட்டுகின்றனர்.” என்று டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களை தமிழக போலீசார் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கவேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.20 கோடி வரை தருகிறோம் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர். இதற்கு ஒத்துப்போகாத எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியும் உள்ளனர்.

தமிழகத்தில் நடந்து வரும் துரோக ஆட்சி, கர்நாடகத்தில் உள்ள எங்களது எம்.எல்.ஏ.க்களை போலீசார் மூலம் மிரட்டி பார்த்துள்ளனர். இதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக போலீசில் புகார் அளிக்க உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய போலீசார் மீதும், அத்துறை தலைவராக இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஆதரவை விலக்கிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் பழனிசாமி அரசு, 20 கோடி ரூபாய் தருவதாக பேரம்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.