Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதால், மக்கள் ஓட முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாயினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையம் உள்ளது. இங்குள்ள நடைபாதை மேம்பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்கள் நடந்து சென்ற போது, மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்கு மக்கள் ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூச்சு திணறி 22 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 Responses to மும்பை ரயில் நிலையத்தில் மின்கசிவு வதந்தி; நெரிசலில் சிக்கி 22 பேர் பலி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.