இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய மாணிக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியை நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு முதலீட்டுகள் 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன. மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தித்துறையில் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படவுள்ளது. கடனில் சிக்கியிருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது: ரணில்