‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது. ஆகவே, அதில் அ.திமு.க. தொண்டர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் இணைந்ததற்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் பொதுக்குழு சட்டவிரோதமானது என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 20 பிரிவு 6இன் படி பொதுக்குழுவையும், செயற்குழுவையும் பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். கழகத்தின் சட்டதிட்ட விதிமுறை 19 பிரிவு 7இன் படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் பொதுச்செயலாளர் கூட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சட்ட திட்ட முறைகளும் இதையே பறைசாற்றுகின்றன.’ என்றுள்ளது.

0 Responses to பொதுச்செயலாளரின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது: டி.டி.வி.தினகரன்