தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு உத்தரவிடுங்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் வலியுறுத்தின. தி.மு.க. சார்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
அதன்படி பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் டி.ராஜா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரிய மு.க.ஸ்டாலின் கடிதத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் வழங்கினர்.

0 Responses to பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரி ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு!