Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடைகோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை பொதுக் குழு நடைபெறுகிறது. இந்த பொதுக் குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு உரிமையில்லை என்றும் எனவே பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்கக்கோரி தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்ற விதிப்படி மனுவை முன்னதாக தலைமை நீதிபதி அமர்வுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரனை எதிர்மனு தாரராக சேர்த்துள்ளது உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுக்குழு கூட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஏ வெற்றிவேலுவிற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். பொதுக்குழுவில் பங்கேற்க விருப்பம் இல்லாதவர்கள் நோட்டீசை நிராகரித்து வீட்டிலேயே இருக்கலாம் என்றும் அல்லது கூட்டத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டு விட்டு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக நாளை நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தடை கோரும் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.