ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவே உத்தரவிட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கும் ஜெனரல் ஜகத் ஜயசூரியவே உத்தரவிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரத்துபஸ்வெலையில் சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், சிறைக் கைதிகள் மீதும் ஜகத் ஜயசூரியவே தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாகவும், முறையான விசாரணைகள் இடம்பெற்றால் சாட்சியமளிக்கத் தயார் எனவும் சரத் பொன்சேகா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கும் ஜெனரல் ஜகத் ஜயசூரியவே கரணம்!: பொன்சேகா