Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காஷ்மீர் எல்லை, டோக்லாம் பகுதி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து எல்லைப்பகுதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக, உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு நேற்று வியாழக்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியில் சிறந்து விளங்கிய இராணுவ படை பிரிவுகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இதில் இராணுவமும் பங்கு கொள்ளும். நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி இராணுவத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு 15ஆம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும். இராணுவ பாசறை பகுதியில் மட்டும் இன்றி, அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த பணி மேற்கொள்ளப்படும்.

காஷ்மீர் எல்லை, டோக்லாம் பகுதி உள்ளிட்ட நாட்டின் எல்லைப்பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகவும் விழிப்புடன் செயல்படுகிறது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. எனவே நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவின் அனைத்து எல்லைகளும் பாதுகாப்பாக உள்ளன: நிர்மலா சீதாராமன்

Post a Comment

Followers