Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூத்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

கௌரியின் உறவினர்கள் முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து பேசினர். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த பெண் கௌரி லங்கேஷ் (55) கடந்த 05ஆம் தேதி அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டுள்ளார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் என கௌரியின் சகோதரர் இந்திரஜித் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கவுரியின் தாயார் இந்திரா லங்கேஷ் நேற்று முதல்வர் சித்தராமைய்யாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். உடன் உறவினர்களும் இருந்தனர்.

சந்திப்பின் போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தினர். சிறப்பு விசாரணை குழுவின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருப்பதாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை என்றும் இந்திரா லங்கேஷ் பின்னர் தெரிவித்தார்.

சந்திப்புக்கு பின் முதல்வர் சித்தராமைய்யா கூறுகையில், “கௌரி லங்கேஷ் கொலை குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மாநில அரசு விரும்புகிறது. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். தற்போது சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.

கௌரி கொலை குறித்து சோனியா காந்தி என்னிடம் சில விவரங்களை கேட்டார். அதே போல் கௌரியின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் விசாரணை நிலவரம் குறித்து வெளிப்படையான தகவல்களை அளித்துள்ளேன். விசாரணையின் நிலவரத்தை தொடர்ந்து நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.” என்றார்.

0 Responses to ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் கொலையில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது: முதல்வர் சித்தராமையா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...