Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவில் இருந்து திபேத்தினூடாக நேபாள எல்லைக்குச் செல்லும் அதிவேகப் பாதையை சீனா வெள்ளிக்கிழமை திறந்துள்ளது. இந்த அதிவேகப் பாதை பொது மக்களின் தேவைக்காகவும் பிராந்திய பாதுகாப்புத் தேவைக்காகவும் பயன்படும் விதத்தில் இரு நோக்கங்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திபேத்துக்கும் நேபாளத்துக்கும் இடையேயான தனது உறவை வலுப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப் படுத்த சீனா எத்தனித்துள்ளது. திபேத்தின் சிகாஷே விமான நிலையத்தில் இருந்து சிகாஷே நகர மத்தியினூடாக 40.5 Km நீளத்துக்கு இந்த அதிவேகப் பாதை கட்டமைக்கப் பட்டுள்ளது. திபேத்தின் 2 ஆவது மிகப்பெரிய நகரான சிகாஷே இல் இராணுவ விமான நிலையம் மற்றும் பொது மக்கள் தேவைக்கான 1 மணித்தியாலப் பயணம் இந்த அதிவேகப் பாதையால் 30 நிமிடமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

மேலும் புவியியல் ரீதியாக இந்த அதிவேகப் பாதையும் ரயில்வே லைனும் தெற்காசியாவின் திபேத், நேபால், இந்தியா, பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இணைப்பதால் இப்பிராந்தியத்தின் பொருளாதார அரசியல் நலன்களுக்குத் துணை செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீனாவின் 5476 Km நீளமான மிக நீண்ட அதிவேகப் பாதையான G318 இற்கு செல்லவும் இந்த அதிவேகப் பாதை வழி சமைப்பதால் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தரைவழி போக்குவரத்தையும் இலகுவாக்கி உறவை வலுப்படுத்தவும் உள்ளது.

சீனாவில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த அதிவேக சாலைகள் போன்றே 25m அகலமான இந்த 4 அடுக்கு திபேத் அதிவேக சாலையும் அமைந்துள்ளது. இச்சாலையில் கன ரக வாகனங்களும் லாரிகளும் பயணிக்க முடிவது மட்டுமன்றி அவசர காலத்தின் போது விமான ஓடு பாதையாகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to திபேத்தினூடாக நேபாலுக்கு செல்லும் அதிவேகப் பாதையைத் திறந்தது சீனா!

Post a Comment

Followers