Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தனித்து நின்று எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான குழப்பம் தோன்றியுள்ளபோதும், திருத்தம் கைவிடப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகின்றது.

அரசமைப்பின் 20வது திருத்தம் கைவிடப்பட்டால் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசெம்பர் 9ஆம் திகதி நடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குத் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது என்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபை தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டாட்சியில் உள்ளது. எனவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கேட்டபோதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குளறுபடிகள், மோசடிகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆசனங்களை இழந்தது. இப்போது தேர்தல் நடைபெற்றால், அவ்வாறான குளறுபடிகள், மோசடிகள் நடைபெறாது என்றே எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாகவே போட்டி: கூட்டமைப்பு

Post a Comment

Followers