வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு- கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. வடக்கு- கிழக்குக்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கும் அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம், வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம்கள் சிதறுண்டு காணப்படுவதால் எமது பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் எல்லை நிர்ணயம் காரணமாக பல இடங்களிலும் முஸ்லிம்களின் வாக்குகள் பரிந்து காணப்படுவதால் அவற்றை வென்றெடுப்பதற்கு வியூகம் அமைத்தே செயற்பட வேண்டியிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் முடிவு!