Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள், நீதாய விளக்க நீதிமன்றில் (ட்ரயலட்பார்) நடைபெற்று வந்த நிலையில், இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் இந்தத் தீர்ப்பினை நீதிபதி சசி மகேந்திரன் தலைமையிலான நீதிபதிகள் குழு அறிவித்தது.

மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதில், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதி மேற்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசாங்கத் தரப்புத் தொகுப்புரையில், முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை, சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பேருக்கு மரண தண்டனை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.