Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைத் துவம்சம் செய்த இர்மா புயலின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் இன்னமும் மீளாத நிலையில் அட்லாண்டிக் கடலில் இருந்து மரியா என்ற இன்னொரு புயல் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளையும் லீவார்டு தீவுகளையும் நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மிகவும் வலுவடைந்து இந்தப் புயல் குறைந்த பட்சம்

90 Km/h வேகத்தில் தாக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதிகளவு சேதத்தை ஏற்படுத்தக் கூடிய 4 ஆவது புயலாக இது உருமாறும் போது போர்ட்டோ ரிக்கோ மற்றும் வேர்ஜீனியா தீவுகளை புதன்கிழமை கடுமையாகத் தாக்கக் கூடும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மிக வலிமையான இர்மா புயல் தாக்கிச் சென்ற அதே பகுதியினூடாகவே இந்த மரியா புயலும் நகரும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை அளவில் சுமார் 4 இலட்சம் மக்கள் தொகை கொண்ட அத்திலாந்திக் பகுதியிலுள்ள பிரான்ஸின் குடெலோப் மற்றும் மார்ட்டினிக்குவே ஆகிய பிராந்தியங்களை மரியா புயல் தாக்கியதால் அங்கு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரச அலுவலகங்கள், வணிகத் தலங்கள் ஆகியன மூடப் பட்டதுடன் சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப் பட்டது. மேலும் இன்று மதியம் இப்பகுதிகளை மரியா புயல் தீவிரமாகத் தாக்கும் என்று கணிக்கப் படும் பட்சத்தில் அவசரமாக வானில் இருந்து விமானங்கள் மூலம் பொது மக்களை வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இர்மா புயலுக்கு பிரெஞ்சு மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 15 பொது மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கரீபியன் மற்றும் லீவார்டு தீவுகளை நோக்கி முன்னேறும் அடுத்த புயல் மரியா!

Post a Comment

Followers