Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகில் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ள மக்கள் நடமாட்டம் அற்ற கண்டமான அண்டார்டிகாவில் அண்மைக் காலமாக மனிதனின் செயற்பாடுகளால் ஏற்பட்டு வரும் பூகோள வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகிக் கடல் நீர் மட்டம் ஒவ்வொரு வருடமும் கனிசமான அளவில் உயர்ந்து வருதாக புவியியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பைன் என்ற தீவில் உள்ள பனிப்பாறையின் நடுவே ஒரு பாரிய பிளவு தோன்றியிருப்பதை நாசாவின் செயற்கைக் கோள் மூலமாக அவதானிக்கப் பட்டுள்ளது. இந்த  பைன் தீவுதான் அண்டார்டிகாவில் வேகமாக உருகி வரும் பனிப்பாறை என்பதுடன் இதில் சுமார் 266 சதுர கிலோமீட்டர் அளவுள்ள பனிப்பாறை குறித்த பிளவால் பிரிந்துள்ளதும் புவியியலாளர்களைக் கலக்கமடைய வைத்துள்ளது. ஏனெனில்  இது  முற்றிலும் உருகினால் உலகின் ஒட்டுமத்த கடல் நீர் மட்டமும் 1.7 அடி அளவு உயர்வது  சாத்தியம் எனவும் இதனால் உலகின் கடற்கரை நகரங்களுக்கும் சிறிய தீவுகளுக்கும் பெரும் ஆபத்து காத்திருப்பது உறுதி என்றும் புவியியலாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால் தற்போது இந்த பைன் பனிப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். 2015 இல் அண்டார்ட்டிக்காவில் 225 சதுர அடி கொண்ட பனிக்கட்டிப் பாறைகள் தனியே பிரிந்து வந்ததாலும் இது போன்ற அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அண்டார்டிகாவில் உள்ள ஓர் பனிப்பாறையில் திடீர் பிளவு! : கடல்நீர் மட்டம் உயருமா எனத் தீவிர கண்காணிப்பு

Post a Comment

Followers