“என்னுடைய மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராடிய அனைவருக்கும் நன்றி. இன்றைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனாலும், என்னுடைய மகள் என்னுடன் இல்லை.” என்று வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் நேற்று புதன்கிழமை நீதாய விளக்க நீதிமன்றம் (ட்ரயலட்பார்) குற்றவாளிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின்னர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே, வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எந்தவொரு தாய்க்கும் இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது. தற்பொழுது நீதி கிடைத்துள்ள போதும் இன்று எனது பிள்ளை உயிருடன் இல்லை. சீ.ஐ.டியினராலேயே இந்த நியாயம் எமக்கு கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அதிகாரி மேலும் பல பதவி உயர்வுகளைப் பெறவேண்டும். என்னைப்போல ஒரு தாய் அழக்கூடாது. இப்படி ஒரு கேவலம் இனிமேல் நடக்கவும் கூடாது.” என்றுள்ளார்.

0 Responses to மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராடிய அனைவருக்கும் நன்றி; வித்தியாவின் தாயார்!