புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இப்போதே தூக்கி எறிவது புத்திசாலித்தனம் அல்ல. மாறாக, இறுதி அறிக்கை வரும் வரை காத்திருந்து விடயங்களை ஆராய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பினை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறந்தது அல்ல. நாம் காத்திருந்து இறுதி அறிக்கையை கவனிக்க வேண்டும். அப்போதுதான், அதனை ஆதரிக்க வேண்டுமா, இல்லையா என்கிற முடிவுக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அறிக்கை தொடர்பில் ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

0 Responses to இடைக்கால அறிக்கையை இப்போதே தூக்கி எறிவது புத்திசாலித்தனம் அல்ல: தர்மலிங்கம் சித்தார்த்தன்