அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தானும் செல்வதற்கு தயாராக இருந்த போதும், தனக்கு அமெரிக்கா விசா அனுமதியை வழங்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் திலக் மாரப்பன, பிரதியமைச்சர்கள் சிலருடன் தன்னையும் ஜனாதிபதி தெரிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இரண்டு இலட்சம் வரையான இராணுவத்தினரில் ஏழு, எட்டுப் பேர் செய்த குற்றங்களால் தனக்கும், நாட்டின் அனைத்து இராணுவத்தினருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா எனக்கு விசா அனுமதி வழங்கவில்லை: சரத்