Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, பாதுகாப்புத்துறையை தன்னுடைய இலாகாக்களில் ஒன்றாக வைத்துக் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மத்திய அமைச்சரவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் நிர்மலா, நக்வி, தர்மேந்திர பிரதான், பியூஸ்கோயல் ஆகியோர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டனர். 9 பேர் இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிர்மலா சீதாராமன்- பாதுகாப்புத்துறை
சுரேஷ் பிரபு- வர்த்தகத்துறை
பியூஸ்கோயல்- ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை
ஸ்மிருதி இரானி- தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் கங்கை நதி சுத்தகரிப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலன்
தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியத்துறையுடன் கூடுதலாக திறன்மேம்பாடு
உமாபாரதி- குடிநீர் பராமரிப்பு

இணையமைச்சர்களின் பொறுப்பு:

ஆர்கே சிங் -எரிசக்தி துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(தனிப்பொறுப்பு)
அல்போன்ஸ்- சுற்றுலா துறை
ஹர்தீப் புரி- நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை
ஷிவ் பிரதாப் சுக்லா - நிதித்துறை
அஸ்வினி சவுபே - சுகாதாரம்
சந்தோஷ்குமார் கங்குவார் - தொழில்துறை(தனிப்பொறுப்பு)
சத்தியபால் சிங் - மனித வள மேம்பாடு, நீர்பாசனம்
கஜேந்திர சிங் - வேளாண்மை
அனந்த்குமார் ஹெக்டே - திறன்மேம்பாடு
வீரேந்திர குமார் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
ரத்தோர் - விளையாட்டு துறை (தனிப்பொறுப்பு)

0 Responses to பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...