ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படும் நோக்குள்ளவர்கள், கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைவரையும் கட்சியில் வைத்து கொள்ள வேண்டுமே தவிர எவரையும் நீக்கும் எண்ணம் இல்லை. ஏனினும், வேறு கட்சி ஆரம்பிப்போரை கட்சியில் இருந்து நீக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திக்கோவிட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர