Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவரே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த கரன் அமுதவல்லி என்ற நிறைமாதக் கார்ப்பிணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தை பேற்றுக்கான சத்திர சிகிச்சை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அமுதவல்லி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த பெண் பிரசவத்திற்காக குறித்த அறையில் இருந்த போது குழந்தையை வெளியெடுப்பதற்காக வைத்திய உபகரணங்களை பயன்படுத்தி வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குழந்தை பிரசவம் நடைபெற்ற பின்னர் தாய்க்கு தையல் போடும் போது திடீர் என தாய் இறப்பிற்கு சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்தியர்கள் தாயை உடனடியாக சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றியுள்ளனர்.

சத்திர சிகிச்சை கூடத்திற்கு திடீர் என கொண்டு செல்லப்பட்ட பெண்ணிற்கு அங்கே நின்ற வைத்தியர்கள், தாதியர்கள் மூலமே உயிர் காக்கும் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவசர சூழ்நிலையின் போது உயிரை காப்பாற்றக்கூடிய வளங்கள் அங்கு இருக்கவில்லை என அறிவிக்கப்படுகிறது.

நீண்ட நேர இடைவெளியின் பின்னர் தாயின் உயிரை மீட்டெடுத்த வைத்தியர்கள் மேலதிக பராமரிப்பிற்காக ICU விற்கு மாற்றியுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவமானது இன்று மதியம் 2 மணியளவில் பெண்ணின் இறப்புடன் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

உடனடியான கவனிப்புக்களான CPR ஆரம்பிப்பதற்கு தாமதமானமையால் மூளைக்கு செல்ல வேண்டிய குருதியின் அளவு குறைவடைந்தமையால் அமுதவல்லி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.

நீண்ட நேரம் சுகப் பிரசவத்திற்காக காத்திருக்கும் தாய்மார்களில் 10,000 பேரில் ஒருவருக்கு இது போன்று இது போல மரணம் சம்பவிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சரியான முன்னேற்பாடுகள் இருப்பின் நிச்சயமாக அவர்களை காப்பாற்றலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதமும் யாழ் போதனா வைத்தியசாலையில் 17 வயதுடைய ஒரு பெண் பிரசவித்த குழந்தை கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமையானது யாழ். குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் திடீரென மரணம்!: யாழ்.குடாநாடு அதிர்ச்சியில்..

Post a Comment

Followers