Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்று ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் கடந்த 215 நாட்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதம் படைத்தரப்பினருடன் சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நடத்திய பேச்சுகளின்போது ஜூன் மாத இறுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டது. அது பின்னர் நிறைவேற்றப்படவில்லை.

இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் மிகக் காட்டமான கடிதம் ஜூலை மாத இறுதியில் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் செயலரால் உறுதி வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன் பின்னரும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், கேப்பாப்பிலவு விடயம் தொடர்பில் இறுதியான தீர்க்கமான முடிவு எடுப்பதற்காக ஜனாதிபதியுடன் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவேன் என்று கூறியிருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதியால் இரா.சம்பந்தனுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to கேப்பாபுலவு காணி விவகாரம்: பேச்சுக்கு வருமாறு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...